பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவது மனித உரிமைகளுக்கு முரணானது என சிறிலங்காவுக்கான பிரிட்டன் தூதரகம் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா அரசாங்கம் போராட்டத்தை முன்னெடுப்பவர்கள் மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பிரயோகின்றது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, ஹஷாந்த குணதிலக்க மற்றும் கல்வல சிறிதம்ம தேரர் ஆகியோரை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 90 நாள்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுமதி வழங்கியுள்ளார் என பொலிஸ் ஊடகப் ப।ிரிவு தெரிவித்துள்ளது.
அதன் காரணமாகவே அவர்கள் 90 நாள்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது மூலம் தேசிய ரீதியில் மட்டுமின்றி சர்வதேச ரீதியிலும் நாடு பெரும் சிக்கலான நிலைக்குத் தள்ளப்படும் என்று தூதரகம் தனது உத்தியோகபூர்வ டுவீற்றர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
Discussion about this post