2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைத் துணித் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்றுமுன்தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே குறித்த யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டுக்கான சீருடைத்துணி 2022 ஆம் ஆண்டு பாடசாலை இறுதித் தவணைக்கு முன்னர் மாணவர்களுக்கு வழங்கப்படவேண்டும்.
அத்துடன் இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க 2023 ஆம் ஆண்டுக்கான பள்ளி சீருடைத் தேவையின் ஒரு பகுதியை வழங்க சீன அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.
சீன அரசால் வழங்கப்படும் சீருடைத்துணிக்கு மேலதிகமான தேவையை உள்ளூர் துணி உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் முன்வைத்த இந்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்தார்.
Discussion about this post