முன்னாள் ஜனாதிபதி கோத்தாயப ராஜபக்சவின் மிரிஹான பகிரிவத்தை பிரதேசத்திலும் அதைச் சூழவுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்று பொலிஸ் மா அதிபர் பிரதேசத்தில் உள்ள பொலிஸ் மற்றும் புலனாய்வு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் வீட்டைச் சூழவுள்ள பகுதிகள் விசேட கண்காணிப்பில் வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச எதிர்வரும் 24ஆம் திகதி சிறிலங்கா வரவுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியும் தெரிவித்துள்ளார்.
கோத்தாபய ராஜபக்ச இலங்கைக்கு திரும்புவது தொடர்பில் தற்போதைய அரசாங்கத்துக்கு உத்தியோகபூர்வ பங்கு எதுவும் இல்லை எனவும், அவர் இலங்கை பிரஜை என்பதனால், அவர் வந்து செல்லும் திறன் கொண்டவர் எனவும் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post