நெற் செய்கை குறைந்துள்ளதால் சிறிலங்கா பெரும் உணவு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. கடந்த வருடங்களில் சிறுபோகத்தில் இரண்டு மில்லியன் மெற்றிக் தொன்னாக இருந்த அறுவடை இனிவரும் காலத்தில் பாதியாகக் குறைவடையும் என்று பிரசித்தி பெற்ற சர்வதேச ஊடகமான ’தி ஜப்பான் ரைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
பேராசிரியர் புத்தி மாரம்பேவையை மேற்கொள்காட்டி வெளியிடப்பட்டுள்ள அந்தச் செய்தியில், இந்த நெல் பற்றாக்குறை, உணவுப் பாலத்தில் பெரும் இடைவெளியைத் தோற்றுவித்து, ஆரோக்கியக் குறைவை அதிகரிக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் இந்த நிலைமைக்கு உரம் மட்டுமின்றி, எரிபொருள் சிக்கலும் தாக்கம் செலுத்தியுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அரிசியில் தன்னிறைவு பொருளாதாரம் கொண்ட சிறிலங்கா இன்று அரிசிக்காக ஏனைய நாடுகளை நம்பியுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
Discussion about this post