வத்தளையிலுள்ள தனியார் நிறுவனமொன்றின் களஞ்சியசாலையில் இருந்து 21 மடிக்கணினிகளை திருடிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எலகந்த மற்றும் மாதின்னாகொட பகுதிகளை சேர்ந்த 26 மற்றும் 32 வயதான இரண்டு இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களில் ஒருவர் அதே நிறுவனத்தில் பணியாற்றியவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
திருடப்பட்ட கணினிகளில் 13 கணினிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர்களை வெலிசறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, பிரதான சந்தேகநபர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மற்றைய சந்தேகநபருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Discussion about this post