நல்லூர் ஆலய சுற்றாடலில் யாழ்ப்பாணம் மாநகர சபையால் அனுமதிக்கப்பட்ட தொகையைவிட அதிக தொகையை அறவிட்ட வாகனப் பாதுகாப்பு நிலையமொன்று மாநகர சபையால் மூடப்பட்டுள்ளது.
பருத்தித்துறை வீதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வாகனப் பாதுகாப்பு நிலையத்தில் அதிக தொகை அறவிடப்படுகின்றது என்று பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளை அடுத்தே குறித்த வாகனப் பாதுகாப்பு நிலையத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சைக்கிள் ஒன்றுக்கு 20 ரூபாவும், மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு 30 ரூபாவும், முச்சக்கர வண்டி மற்றும் கார் ஆகியவற்றுக்கு 50 ரூபாவும், வான் ஒன்றுக்கு 100 ரூபாவும் அறவிடப்பட வேண்டும் என்றும் யாழ்ப்பாணம் மாநகர சபையால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிர்ணயக் கட்டணங்களுக்கு அதிகமாகப் பக்தர்களிடம் கட்டணம் அறவிடப்பட்டாலோ, மாநகர கபையின் அங்கீகாரம் பெறாத சிட்டைகள் வழங்கப்படுவது கண்டறியப்பட்டாலோ அந்த வாகனப் பாதுகாப்பு நிலையங்கள் உடனடியாக மூடப்படும் என்று யாழ்ப்பாணம் மாநக சபை அறிவித்துள்ளது.
Discussion about this post