தேசிய விலங்காக பெயரிப்பிடப்பட்டுள்ள மரஅணிலை அந்தப் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு விவசாய மற்றும் வனஜீவராசிகள் அமைச்சு பரிந்துரை செய்துள்ளது.
பயிர் செய்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விலங்கினமாக மரஅணில் காணப்படுவதாக பல்வேறு விவசாய அமைப்புகளை சேர்ந்தவர்கள் கூறியுள்ளதுடன் தேசிய விலங்காக அதனை பெயரிட்டுள்ளதால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால் தேசிய விலங்கு பட்டியலில் இருந்து மரஅணிலை நீக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விடயத்தில் தேசிய மரபுரிமைகள் தொடர்பாக பெயரிடும் குழு உள்ளிட்ட பல தரப்பினருடன் கலந்தாலோசிக்க வேண்டும் என விவசாய அமைச்சு கூறியுள்ளது.
தேசிய விலங்காக பெயரிடுவதற்கு பல விலங்களின் பெயர்கள் இதுவரை பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன் இலங்கைக்கே உரித்தான புலியும் அதற்குள் இடம்பெற்றுள்ளதென விவசாய அமைச்சு குறிப்பிடுகின்றது.
மரஅணிலின் தாக்கத்தினால் தெங்கு, கொக்கோ உள்ளிட்ட செய்கைகளின் அறுவடையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
Discussion about this post