ஜப்பானின் சர்வதேச நிறுவனமான ஜெய்கா நிறுவனத்தின் ஆதரவுடன் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வந்த 12 வேலைத்திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தற்போது சிறிலங்கா எதிர்கொண்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடியால் கடன்களை அடைக்க முடியாது என்று தெரிவித்தே ஜெய்கா நிறுவனம் வேலைத்திட்டங்களை நிறுத்தியுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து திட்ட வரைபடத்தை உருவாக்கும்வரையில் இந்தத் திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்த அமைச்சர், சர்வதேச நாணய நிதியம் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னர், இந்தத் திட்டங்களுக்கான நிதி கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.
Discussion about this post