பாகிஸ்தானின் “தைமூர்” போர்க் கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. சீன ஆய்வுக் கப்பலின் இலங்கை வருகை பெரும் சர்ச்சையாக மாறியிருக்கும் நேரத்தில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சீனாவில் கட்டமைக்கப்பட்ட பிஎன்எஸ் தைமூர் என்ற இந்தப் போர்க் கப்பல் ஷங்காய் நகரில் இருந்து கராச்சிக்குச் செல்லும் வழியில் நல்லெண்ண அடிப்படையில் கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிடுகின்றது என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் கப்பல் எதிர்வரும் 12ஆம் திகதி முதல் 15ஆம் திகதிவரை நங்கூரமிட்டிருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேவேளை, இந்தக் கப்பல் தங்களது நாட்டுத் துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்குப் பங்களாதேஷ் அனுமதி மறுத்துள்ளது.
Discussion about this post