விடுதலை புலிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுத்த நான், ஏன் நாட்டைவிட்டு ஓட வேண்டும் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
நான் எப்போதும் மக்களுடன் தான் இருக்கின்றேன், நாட்டை விட்டு ஓடும் எண்ணம் எனக்குக் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.
புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்கள் சிலருடன் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் உரையாடிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அதியுயர் பதவிகளில் இருந்து ராஜபக்சக்கள் விரட்டியடிக்கப்படும் போராட்டத்துக்குத் திட்டம் தீட்டிய உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளை எனக்கு தெரியும் என்று தெரிவித்துள்ள அவர், எனினும், நான் அமைதியாகவே இருக்கின்றேன், உண்மைகள் ஒருநாள் வெளிச்சத்துக்கு வரும், காலம் ஒரு நாள் பதில் சொல்லியே தீரும் எனவும் தெரிவித்துள்ளார்.
Discussion about this post