கொழும்பு காலி முகத்திடலில் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது அதிகாரிகளால் பலவந்தமாகவும், வன்முறையை தூண்டும் விதத்திலும் நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
காலி முகத்திடலுக்கு மக்கள் பிரவேசிப்பதை தடுக்கும் வகையில் நூற்றுக்கணக்கான பொலிஸாரும் இராணுவத்தினரும் வீதிகளை மறித்துள்ளதை காணக்கூடியதாக உள்ளதென சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த பகுதிக்குள் பிரவேசிப்பதற்கு முயற்சித்த சட்டத்தரணிகளும் தடுக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் ரீதியில் தலையீடு செய்வதற்கு முயற்சித்த சட்டத்தரணிகளில் குறைந்தபட்சம் இருவர் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
நிராயுதபாணிகளான பொதுமக்களை இலக்காகக்கொண்டு ஆயுதமேந்திய இராணுவத்தினர் முன்னெடுக்கும் இந்த நடவடிக்கைகள் உடன் நிறுத்தப்பட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சட்டவாட்சி மற்றும் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது அரசாங்கம் உறுதியளிக்க வேண்டும் எனுவும் சட்டத்தரணிகள் சங்கம் கோரியுள்ளது.
Discussion about this post