ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில் சர்வதேச நாணய நிதியம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, இலங்கைக்கான கடன்திட்ட பேச்சுவார்த்தையினை விரைவாக முடிவுக்கு கொண்டுவருவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகப் பணிப்பாளர் Kristalina Georgieva சர்வதேச ஊடகமொன்றுக்கு இன்று வழங்கிய செவ்வியில் இதனை தெரிவித்துள்ளார்.
இடைக்கால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான நிர்வாகத்துடன் சர்வதேச நாணய நிதியம் இணைந்து செயற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Discussion about this post