இலங்கையில் நாளை ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெறுகின்றன என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ள முன்னிலை சோசலிசக் கட்சி, 104 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தலா ஒரு கோடி ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
அதேவேளை, கடந்த மே மாதம் 9ஆம் திகதி ஏற்பட்ட அமைதியின்மையில் எரிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு மாற்றீடாக தளபாடங்களுடன் கூடிய வீடுகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை ஜனாதிபதித் தெரிவு நடைபெறவுள்ள நிலையில் டலஸ் அழகப்பெரும, ரணில் விக்கிரமசிங்க, அநுரகுமார திசாநாயக்க ஆகியோர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுகின்றனர்.
Discussion about this post