நாளை ஜனாதிபதித் தெரிவுக்கான வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், மக்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டால் அவற்றைக் கடுமையான முறையில் அடக்குவதற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது.
பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபடுவோர் வலியுறுத்தும் நிலையில், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதிப் பதவிக்கான போட்டியில் களமிறங்கியுள்ளார். அதனால் எதிர்ப்புப் போராட்டங்கள் நாளை வலுப் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபடுவோரை இரும்புக் கரம் கொண்டு அடங்குவதற்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு பதில் ஜனாதிபதியால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டமைக்கான முக்கியமான காரணம் இதுவெனவும் கூறப்படுகின்றது.
போராட்டங்கள் வலுப்பெற்றால் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும், நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் விதிக்கப்படலாம் என்றும் கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.
Discussion about this post