யாழ்ப்பாணம், புன்னாலைக் கட்டுவனில் 14 வயதுச் சிறுமி ஒருவரின் உடல் வீடொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
வீட்டில் இருந்தவர்கள் வெளியே சென்று வீடு திரும்பியபோது சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்துப் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
சிறுமி தூக்கிட்டு உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படும் நிலையில், பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Discussion about this post