பாண் உட்பட வெதுப்பக உற்பத்திகளைத் தொடர்ந்தும் உற்பத்தி செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாண் உட்பட வெதுப்பக உற்பற்பத்திகளை உற்பத்தி செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
எமக்கான டீசலைப் பெற்றுத் தரக்கோரிப் பல தடவைகள் கோரிக்கைகள் விடுக்கப்பட்டபோதும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
Discussion about this post