நாடு முழுவதும் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இதனால், ஜனாதிபதிக்கு தற்போது மக்களின் ஆதரவு இல்லை. இந்த நிலையில், சர்வக்கட்சி அரசாங்கம் ஒன்றின் கீழ் நாட்டில் காணப்படும் உக்கிரமான நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வந்து, தேர்தலை நடத்த வேண்டும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புடன் அமெரிக்காவுக்கு செல்ல சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்கவும் தயார். ஜனாதிபதியை பரிதாபகரமான நிலைமைக்குள் தள்ள எதிர்பார்க்கவில்லை.
ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தை நாடாளுமன்றத்திற்கு வழங்க வேண்டிய சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.
Discussion about this post