இலங்கையில் நிலவும் கோர பொருளாதார நெருக்கடி காரணமாக இன்று அதிகாலை எட்டுப்பேர் தமிழ்நாட்டை சென்றடைந்துள்ளனர்.
மன்னாரில் இருந்து புறப்பட்ட எட்டுப் பேரும் அரிச்சல்முனையில் இறங்கியுள்ளனர்.
அரிச்சல் முனையை அடைந்த எட்டுப்பேரையும் மரைன் பொலிஸார் மீட்டு மண்டபம் முகாம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறைப் பகுதியைச் சேர்ந்த 8 பேரே தமிழகத்தின் தனுஷ்கோடிக்கு கடல் மார்க்கமாக சென்றுள்ளனர்.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருடிக்கடியினால் கடந்த 4 மாத காலத்தில் மாத்திரம் 103 பேர் தமிழகத்தில் தஞ்மடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post