தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்களால் அடுத்த வாரம் முதல் சுகாதார சேவை சரிவடைய வாய்ப்புள்ளது என்று நிபுணத்துவ வைத்தியர்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் நெருக்கடி காரணமாக வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் கூட வைத்தியசாலைகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று ஒன்றியத்தின் செயலாளர் மருத்துவர் சுனந்த பெரேரா தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளபோதும், அது சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.
Discussion about this post