பாடசாலை விடுமுறையைக் குறைத்து பாடசாலை நாள்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நேற்று நடந்த யோகா தின நிகழ்வில் கலந்துகொண்டபோதே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது, ஓகஸ்ட் மற்றும் டிசெம்பர் மாதங்களில் பாடசாலை விடுமுறையைக் குறைத்து பாடசாலை நாள்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
மேலதிகமாக நடத்தப்படும் பாடசாலை நாள்களில் இதுவரை தவறவிடப்பட்ட இந்த ஆண்டுக்கான பாட விதானங்களைப் பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களுக்கு எதிர்வரும் ஜூலை மாதம் முதல் தொடர்ச்சியாகப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
உயர்தரங்களுக்கான ஆசிரியர்களுக்கு பல்கலைக்கழகக் கட்டமைப்பு ஊடாகப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
அனைத்து மாகாணங்களின் கல்விப் பணியாளர்களையும் உள்ளடக்கி இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்றார்.
Discussion about this post