ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவின் 43ஆம் படையணி வெளியேறத் தயாராகி வருகின்றது.
அதன் ஆரம்பகட்ட நகர்வாகவே நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படவுள்ளதாக சம்பிக்க ரணவக்க நேற்று அறிவித்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக அல்லாமல், கொள்கை மற்றும் மனச்சாட்சியின் பிரகாரமே இந்த முடிவை எடுத்தேன். தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கம் மற்றும் எதிரணி கூடுதல் பொறுப்புடன் செயற்பட வேண்டும். சுயாதீனமாகச் செயற்பட்டாலேயே அந்தப் பொறுப்பை நிறைவேற்ற முடியும் என்று நம்புகின்றேன்.
சர்வகட்சி அரசாங்கம் அமைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. இப்போது இருப்பது சர்வகட்சி அரசாங்கம் அல்ல .
எனக்கு வாக்களித்த மக்களைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்.
எதிரணியில் இருந்து சிறந்த திட்டங்களுக்கு ஒத்துழைப்பை வழங்குவேன்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் பட்டியலின் கீழ் கொழும்பு மாவட்டத்தில் சம்பிக்க ரணவக்க போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.
Discussion about this post