கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் 25 மாணவர்கள் இன்று குளவிக் கொட்டுக்கு இலக்காகி கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 11 பேர் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று பகல் 1.30 மணியளவில் குரங்குகள் குளவி கூட்டைக் கலைத்துள்ளன. அதனால் பாடசாலை விட்டு வெளியேறுகின்ற நேரத்தில் பல மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இதனால் மாணவர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது. சில மாணவிகள் குளவி கொட்டுக்கு உள்ளாகி மயக்கமடைந்தனர். இவர்கள் உடனடியாக சமூர்த்தி திணைக்களப் பணிப்பாளரின் வாகனத்தில் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Discussion about this post