இந்திய தமிழ் நாட்டிலிருந்து அன்பளிப்பாக கிடைக்கப் பெற்ற உலர் உணவுப் பொதிகள் மண்முனைப்பற்று பிரதேச செயலப் பிரிவில் நேற்று (06) திகதி முதல் வழங்கிவைக்கும் நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.சத்தியானந்தி நமசிவாயம் தலைமையில் குறித்த உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன், இதன்போது பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.வி.லோகினி மற்றும் நிருவாக உத்தியோகத்தர் எஸ்.திவாகரன் உள்ளிட்ட பிரதேச செயலக உயரதிகாரிகளும், உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு நிவாரண பொதிகளை வழங்கி வைத்துள்ளனர்.
மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கே இன்றைய தினம்
உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கென முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ள 50000 பக்கட் அரிசி மற்றும் 3750 பக்கட் பால்மா என்பனவற்றை மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவிற்கும் முன்னுரிமையடிப்படையில் மாவட்ட செயலகத்தினால் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post