இலங்கையில் கடந்த காலங்களில் வெள்ளை வான்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட கொலைகள் தற்போது மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தி நடத்தப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டினார்.
இலங்கையில் கடந்த சில நாள்களாகப் பொது இடங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 5க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். அது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு என்று கூறி ஆட்சிக்கு வந்த கோத்தாபய ராஜபக்ச ஆட்சியில், மக்கள் நடு வீதிகளில் வைத்து சுட்டுக் கொல்லப்படுகின்றனர் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
Discussion about this post