யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள நகைக் கடை ஒன்றுக்குள் நுழைந்த பெண்கள் அங்கிருந்து நகைகளை லாவகமாகத் திருடியுள்ளனர்.
கடையில் இருந்த நகைகளைப் பார்வையிடுவது போன்று பாசாங்கு செய்த பெண்கள், நகைக் கடையில் இருந்தவர் கவனிக்காத நேரம் நகைகளை எடுத்து உடலில் மறைத்துக் கொண்டுள்ளனர்.
நகைக் கடையில் இருந்தவர்களை அந்தப் பெண்கள் ஏமாற்றியபோதும், மேலே பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்புக் கமராவை அவர்களால் ஏமாற்ற முடியவில்லை.
பெண்கள் லாவகமாக நகைகளைச் சுருட்டிக் கொண்டமை பாதுகாப்புக் கமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
Discussion about this post