யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் விடுதிகள் நேற்றுத் திடீரென யாழ்ப்பாணம் மாநகர சபை அதிகாரிகளால் சுற்றி வளைக்கப்பட்டன.
விடுதிகளில் கலாசாரப் பிறழ்வான நடவடிக்கைகள் நடைபெறுகின்றன என்று கிடைத்த தொடர்ச்சியான முறைப்பாடுகளை அடுத்தே இந்தச் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.
சுற்றிவளைப்பு நடத்தப்பட்ட விடுதிகள் சிலவற்றில் தங்கியிருந்த இளம் ஜோடிகள் விசாரிக்கப்பட்டு, எச்சரிக்கப்பட்டு அனுப்பப்பட்டனர்.
விடுதிகளில் கலாசாரப் பிறழ்வான நடவடிக்கைகள் நடைபெறுகின்றன என்றும், வயது குறைந்த ஜோடிகளுக்கு அறைகள் வாடகைக்குக் கொடுக்கப்படுகின்றன என்றும் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், யாழ்ப்பாணம் மாநாகர சபையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் இளம் ஜோடிகள் பலர் சிக்கியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
Discussion about this post