கொடிகாமம் பிரதேச மருததவமனைக்குள் புகுந்து மருத்துவரைத் தாக்கினர் என்ற குற்றச்சாட்டில் 8 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றுப் பிற்பகல் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மருத்துவமனைக்குள் புகுந்த இளைஞர் குழு ஒன்று மருத்துவரின் அறைக்குள் வைத்தும், அவரை வெளியே இழுத்தும் தாக்குதல் நடத்தியது.
இந்தச் சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் 8 இளைஞர்களைக் கைது செய்தனர்.
இந்தச் சம்பவத்தை அடுத்து வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கொடிகாமம் மருத்துவமனைக்குச் சென்று சம்பவம் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார் என்று கூறப்படுகின்றது.
தனது தாத்தாவைச் சிகிச்சைக்கு அழைத்துக் சென்ற யுவதி ஒருவரிடம் மருத்துவர் தொலைபேசி இலக்கத்தைக் கேட்டார் என்று தெரிவித்தே இளைஞர் குழு தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Discussion about this post