யாழ்ப்பாண மாவட்டத்துக்கு 33 ஆயிரம் லீற்றர் மண்ணெண்ணை நேற்றுமுன்தினம் கிடைத்துள்ளதாகவும் அதனை மீனவர்களுக்கு பகிர்ந்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் யாழ். மாவட்டச் செயலர் க.மகேசன் தெரிவித்தார்.
‘இரு வாரங்களுக்குப் பின்னர் யாழ். மாவட்டத்துக்கு இப்போதே மண்ணெண்ணெய் கிடைத்துள்ளது. ஆயினும் மிகக் குறைந்த அளவே கிடைத்துள்ளது.
எனவே இதனை முன்னுரிமை அடிப்படையில் மீனவர்களுக்கு வழங்கவுள்ளோம். அது தொடர்பான விவரங்களை கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் எமக்கு வழங்கும்.
அதற்கு அமைவாக விநியோகம் முன்னெடுக்கப்படும். அதேவேளை விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கும் மண்ணெண்ணெயை வழங்க முயற்சித்து வருகின்றோம்’ என்றார்.
Discussion about this post