இலங்கையில் 50,000 அமெரிக்க டொலர்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெலிகட பகுதியில் வைத்து நேற்று மாலை குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
50,000 அமெரிக்க டொலர்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் 36 வயதுடைய நபரொருவர் ராஜகிரிய வெலிக்கடையில் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமான உண்டியல் மற்றும் ஹவாலா பணப்பரிமாற்ற முறைகளில் ஈடுபடும் நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கையில் வசிக்கும் ஒருவர் வைத்திருக்க அனுமதிக்கப்படும் வெளிநாட்டு நாணயத்தின் சட்ட வரம்பு குறித்த விதிமுறைகளை கடந்த வாரம் இலங்கை மத்திய வங்கி அறிவித்திருந்தது.
இலங்கை குடியுரிமை பெற்ற ஒருவர் தம் வசம் வைத்திருக்கக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் சட்ட வரம்பானது 15,000 அமெரிக்க டொலர்களில் இருந்து 10,000 அமெரிக்க டொலர்களாக குறைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தப்படலாம் எனஇலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post