கோதுமை மாவின் விலை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று பிறீமா நிறுவனம் நேற்று அறிவித்தது.
அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மா விலையேற்றத்தால் பேக்கரிப் பொருள்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. 450 கிராம் (ஒரு இறாத்தால்) பாண் ஒன்றின் ஆகக் கூடிய சில்லறை விலை 170 ரூபா என்றும், பணிஸ் வகைகளின் விலைகள் அதிகரிக்கப்படவில்லை என்றும் யாழ்.மாவட்ட பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் நேற்று அறிவித்தது.
யாழ்ப்பாணத்தில் இதுவரை 450 ஒரு இறாத்தல் பாண் 150 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் 20 ரூபாவால் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஒரு இறாத்தல் பாணின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும், ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருள்களின் விலைகள் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன என்றும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் நேற்று அறிவித்தது.
Discussion about this post