யாழ்ப்பாணம், நல்லூர் முடமாவடியில் நேற்று (17) இரவு நடந்த விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்த இருவரும் நேற்று இரவு இனங்காணப்படவில்லை.
இரவு 10.30 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிள்கள் தீப்பற்றி எரிந்தன. தீயைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில், தீ அணைப்புப் பிரிவிரின் உதவி பெறப்பட்டது.
விபத்தில் படுகாயமடைந்த இரு இளைஞர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதும், அவர்கள் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தனர்.
இந்த விபத்துத் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Discussion about this post