பிரதமராகப் பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவிடம் 8 கோரிக்கைகளை முன்வைத்துள்ள காலிமுகத் திடல் போராட்டக்காரர்கள், அவற்றை உடனடியாக நிறைவேற்றாவிட்டால் மஹிந்த ராஜபக்சவுக்கு ஏற்பட்ட கதியே ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்றுள்ளார் என்று குறிப்பிட்டுள்ள அவர்கள், ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் வரலாற்றை நன்கு அறிவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர்கள், அதை விடுத்துக் கடந்த காலங்களில் செயற்பட்டதைப் போன்று செயற்பட்டால் மஹிந்த ராஜபக்சவுக்கு ஏற்பட்ட கதியே ஏற்படும் என்று எச்சரித்துள்ளனர்.
ஜனாதிபதி பதவியில் இருந்து கோத்தாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்பதே அவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
Discussion about this post