நேற்று திங்கட்கிழமை காலிமுகத் திடலில் அரச ஆதரவுடன் நடத்தப்பட்ட வன்முறைகளைக் கண்டித்து இலங்கை மின்சார சபையின் 14 தொழிற்சங்கங்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தை அறிவித்துள்ளன.
இந்தப் பணிப் புறக்கணிப்பால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மருத்துவமனை மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளுக்குத் தடையில்லாத மின்சாரம் வழங்கப்படும் என்று தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.
Discussion about this post