கிளிநொச்சி, இரணைமடுக்குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் படகு சாய்ந்து குளத்தில் தவறி வீழ்ந்து உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சி, சாந்தபுரத்தைச் சேர்ந்த கிருஸ்ணமூர்த்தி மயூரன் என்ற 22 வயது இளைஞரே உயிரிழந்துள்ளார்.
இளைஞரின் உடல் மீட்கப்பட்டு கிளிநொச்சி மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தந்தையை இழந்த நிலையில் 4 சகோதரிகளைக் கொண்ட இந்த இளைஞரின் உழைப்பிலேயே அந்தக் குடும்பம் தங்கள் வாழ்க்கையைக் கொண்டு நகர்த்தியது என்று ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
Discussion about this post