நாடு முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களினதும், நீதிபதிகளினதும் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச பொலிஸ் மா அதிபருக்குப் பணித்துள்ளார்.
இந்தத் தகவலை பிரதமரின் செயலாளர் ரொஹான் வெலிவெட்ட ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
கடுசெல நீதிவானின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு நீக்கம் தொடர்பில் நீதிச் சேவை ஆணைக்குழுவின் தகவல் சட்ட மா அதிபரால் பிரதமரின் கவனத்துக்கு நேற்றுக் கொண்டு செல்லப்பட்டது.
அது தொடர்பில் நடவடிக்கை எடுத்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச, கடுவெல நீதிவான் மற்றும் நாடு முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்கள், நீதிபதிகளின் பாதுகாப்பை உடனடியாகப் பலப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு பணித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
Discussion about this post