இலங்கை எதிர்காலத்தில் 15 மணி நேர மின்வெட்டை எதிர்கொள்ளும் நிலைமை ஏற்படும் என்று நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் பொருளாதார நெருக்கடி தீவிரமாகியுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், இலங்கையின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு 50 மில்லியன் டொலருக்குக் குறைவாகவே உள்ளது என்று குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் எரிபொருள் இருப்புக்களை இறக்குமதி செய்வது பெரும் பிரச்சினையாக உருவெடுக்கும் என்று தெரிவித்த அலி சப்ரி, அதனால் மின்சார விநியோகம் பெரும் நெருக்கடிக்குள் சிக்கும் என்றும் தெரிவித்தார்.
சர்தேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற வேண்டுமானால் நாட்டில் முதலில் நிலையான அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்றும் நிதி அமைச்சர் தெரிவித்தார்.
Discussion about this post