கிணற்றில் தவறுதலாக வீழ்ந்து கடற்றொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று முல்லைத்தீவு, முள்ளிவாய்க்காலில் நடந்துள்ளது.
திருகோணமலையைச் சேர்ந்த பிரதாப் (வயது-37) என்பவரே உயிரிழந்தவராவார். இவர் கடற்றொழிலுக்காக முள்ளிவாய்க்காய் வந்து தங்கியிருந்தபோதே இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக முல்லைத்தீவுப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Discussion about this post