சட்டவிரோதமாக தமிழகத்துக்குச் செல்ல முயன்றனர் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம், வேலணையில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனக் கடற்படையினர் தெரிவித்தனர்.
நேற்று அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் ஊர்காவற்றுறைப் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர் என்றும் கடற்படையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் வவுனியாவைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் ஒருவர் சிறுவன் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் வேலணை வெண்புரி ஊடாகத் தமிழகத்துக்குப் படகில் செல்ல முயன்றனர் என்று கூறப்படுகின்றது.
அதேவேளை, இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்துக்குத் தஞ்சம் கோரி படகுகள் மூலம் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
Discussion about this post