பிரிட்டனில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 4 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய இரு அதி சொகுசு வாகனங்கள் உட்படப் பல பொருள்கள் கைப்பற்றப்பட்டள்ளன என்று இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு-புறக்கோட்டை பகுதி வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான 4 கோடிக்கும் அதிக பெறுமதியான இரு அதிசொகுசு ரக வாகனங்கள், 5 வாகன உதிரி பாகங்கள் மற்றும் ஆயிரம் கிலோ கிராம் மஞ்சள் தூள் உள்ளடங்கிய பொருள்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தப் பொருட்கள் உள்ளடங்கிய கொள்கலனின் நிறை சுமார் ஆயிரம் கிலோ என்று தெரிவித்துள்ள இலங்கை சுங்கத் திணைக்களத்தினர், இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தனர்.
Discussion about this post