உரத்தின் விலை பல மடங்காக உயர்ந்துள்ளதால் விவசாய நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளன என்று விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
உரம் விற்கும் சில கடைகளில் 50 கிலோ யூரியா மூடை 40 ஆயிரம் ரூபாவுக்கு விற்கப்படுகிறது என்று தெரிவித்த விவசாயிகள், முன்னைய விலையிலும் இது பல மடங்கு அதிகம் என்று சுட்டிக்காட்டியுள்ளர்.
அதேவேளை, உரங்களை இறக்குமதி செய்யும் தனியார் நிறுவனங்களே விலை நிர்ணயம் செய்கின்றன என்று தெரிவிததுள்ள உர விற்பனையாளர்கள், குறைந்த அளவே உரம் கிடைப்பதாகவும், அதனால் மிக அதிக விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கூறுகின்றனர்.
அது மட்டுமன்றித் தற்போது உர நிறுவனங்கள் காசுக்கு மட்டுமே உரம் வழங்குகின்றன என்று தெரிவித்த உர விற்பனையாளர்கள், அதனால் கொள்வனவில் தாம் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்றும் தெரிவித்தனர்.
Discussion about this post