நிதி அமைச்சர் அலி சப்ரி இன்று நீதி அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இன்று மாலை ஜனாதிபதி முன்னிலையில் அவர் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
தற்போதைய அரசின் முன்னைய அமைச்சரவையில் அலி சப்ரி நீதி அமைச்சராகப் பதவி வகித்தார்.
அதன்பின்னர் அமைச்சரவை கூட்டாகப் பதவி விலகிய பின்னர் நிதி அமைச்சுப் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.
தற்போது அவருக்கு நீதி அமைச்சுப் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
Discussion about this post