தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்ட பேரணி கண்டியிலிருந்து இன்று ஆரம்பமாகியுள்ளது.
நிடஹசே அறகல்ய எதிர்ப்பு பேரணி இன்று காலை 9.30 மணிக்கு கண்டியில் இருந்து ஆரம்பமானது என நாடாளுமன்ற உறுப்பினரான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
நாளை வியாழனன்று மாவனல்லையில் இருந்து கலிகமுவ வரையும், கலிகமுவவில் இருந்து தன்னோவிட்ட வரையும் இந்த எதிர்ப்பு பேரணி பயணிக்கவுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி தன்னோவிட்டயிலிருந்து யக்கலை வரையும், 30ஆம் திகதி யக்கலவில் இருந்து பேலியகொட வரையும் இந்த ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெறவுள்ளது.
மே தினத்தை நினைவுகூரும் வகையில் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி கெம்பல் பூங்காவில் இருந்து சுதந்திர சதுக்கம் வரை நடைபயணம் மேற்கொள்ளவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தை பதவி விலகக் கோரியும், பொதுமக்களின் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையிலும் ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுக்குமாறு தனி நபர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
Discussion about this post