பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில், 56 பேர் கொண்ட குழு, பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிசைச் சந்திப்பதற்காக, வத்திக்கான் நோக்கிப் பயணமாகியுள்ளது.
நேற்று காலை வத்திக்கான் நோக்கிப் பயணமான இந்தக் குழுவில், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 30 பேரும் அடங்குகின்றனர்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க வேண்டும் எனப் பாப்பரசர் விடுத்த அழைப்புக்கு அமைய, குறித்த குழுவினர் வத்திக்கான் பயணமாகியுள்ளனர்.
உள்நாட்டில் நீதி கிடைக்கவில்லை என்பதால்தான் சர்வதேசத்தை நோக்கிப் பயணிக்கின்றோம் என்று பாதிக்கப்பட்ட மக்கள் விமான நிலையத்தில் வைத்து குறிப்பிட்டனர்.
Discussion about this post