இலங்கையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதை அடுத்து சங்கிலித் தொடராகப் பல பொருள்கள், சேவைகளின் விலைகள், கட்டணங்கள் அதிகரித்கப்பட்டுள்ளன.
நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து எரிபொருள்களின் விலைகள் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் அதிகரிக்கப்பட்டன.
அதையடுத்து 450 கிராம் பாணின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏனைய சிற்றுண்டி வகைகள் 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று என்று அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
பிறிமா நிறுவனத்தால் இன்று முதல் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதை அடுத்து வெதுப்பக உற்பத்திப் பொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதேநேரம் மதிய நேர உணவுப் பொதி மற்றும் கொத்து றொட்டியின் விலைகள் 20 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது என்று அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் இன்று அறிவித்துள்ளது.
அதேநேரம், இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைந்த பஸ் கட்டணம் 27 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அறிவிககப்பட்டுள்ளது.
ஏனைய பஸ் கட்டணங்கள் 35 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post