இலங்கையில் நாளை முதல் ஒரு வார காலத்துக்கு ஹர்த்தாலை நடைமுறைப்படுத்த தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
300 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை உள்ளடக்கியுள்ள தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம் இந்த அழைப்பை விடுத்திருக்கின்றது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று ஜனாதிபதி கோத்தாய ராஜபக்ச மற்றும் ஆட்சியிலுள்ள அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தும் போராட்டங்கள் தீவிரமாகியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த அறிவிப்பால் இலங்கை முற்றாக முடங்கா விட்டாலும் பகுதியளவில் முடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே நெருக்கடிகளைச் சந்தித்துள்ள ராஜபக்ச அரசாங்கத்துக்கு இது நெருக்கடிகளை அதிகமாக்கும் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.
அதேநேரம் நாளை முதல் எதிர்வரும் 28ஆம் திகதிவரையான ஒரு வார காலத்தில் நாடாவிய ரீதியில் உள்ள பிரதான நகரங்களில் பெரும் எண்ணிக்கையானோரைத் திரட்டிப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
Discussion about this post