ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கைச்சாத்திட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து பிரேரணைக்கு ஆதரவாக கையெழுத்திட்டனர்.
ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துப்படுத்தி சிரேஷ்ட பிரதித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் கலந்து கொண்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
Discussion about this post