தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் பொருள் விலையேற்றத்தால் மாநகர சபை தீர்மானித்திருந்த சில வேலைத் திட்டங்களை முன்னெடுக்க முடியாத நி லமை தோன்றியுள்ளது என்று யாழ்ப்பாணம் மாநகர் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாநகர சபையில் நேற்று நடத்திய செய்தியாளர் வந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் நகரக் குளத்தைச் சீரமைக்க 40 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியில் அந்த வேலைத் திட்டத்தை மேற்கொண்டால் இரு மடங்கு நிதி தேவையாக இருக்கும் என்று மாநகர முதல்வர் சுட்டிக்காட்டினார்.
மருத்துவமனை வீதி அகலிப்பு, ஸ்ரான்லி வீதி அகலிப்பு போன்ற அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதி மூலங்கள் உள்ள போதும், பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று முதல்வர் தெரிவித்தார்.
விலையுயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு, மின்சார நெருக்கடி போன்றவற்றால் கடந்த காலங்கங்களில் வரவு – செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட சில வேலைத் திட்டங்களை முன்னெடுக்க முடியாத நிலைமை தோன்றியுள்ளது என்று தெரிவித்த மாநகர சபை முதல்வர், நிதி மூலங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, திட்டவரைவு இறுதி செய்யப்பட்டு ஆரம்பிக்கும் நிலையில் இருந்த பல வேலைத் திட்டங்களை, பொருளாதார நெருக்கடி காரணமாக ஒத்திவைக்க வேண்டிய துர்ப்பாக்கியய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
Discussion about this post