நிதியமைச்சர் எந்த அடிப்படையில் அடுத்த ஆறுமாதங்களுக்குள் வரிகளையும் எரிபொருள் விலையையும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளார் என ஐக்கிய வர்த்தக சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ஆனந்த பாலித கேள்வி எழுப்பியுள்ளார்.
எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கத்துக்கு பொதுமக்கள் ஆணை வழங்கவில்லை. அரச நிதி எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதற்காக அடுத்த ஆறு மாதங்களுக்குள் வரிகள் அதிகரிக்கப்படும் எரிபொருள் விலை அதிகரிக்கும், நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஏன் நிதியமைச்சர் எரிபொருள்களின் விலைகளை அதிகரிக்க முயல்கின்றார்? சர்வதேச நாணயநிதியத்தின் ஆதரவை பெறுவது வேறு எரிபொருள் விலைகளை அதிகரிப்பது வேறு.
அரசாங்கம் பல மாதங்களுக்கு முன்னரே சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியிருக்கவேண்டும். அதன் தவறான முடிவுகளாலேயே வறிய மக்கள் துயரில் சிக்கினார்கள்.
பொதுமக்கள் மீது மேலும் சுமைகளை செலுத்துவதற்கு பதில் மக்களின் குரல்களுக்கு செவிமடுத்து அரசாங்கம் பதவி விலகவேண்டும் என்றார்.
Discussion about this post