கொழும்பு, காலி முகத் திடலில் தற்போது அரசாங்கத்துக்கு எதிரானப் பெரும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் நிலையில், அந்தப் பகுதிகளில் இணையவசதிகளை அரசாங்கம் முடக்கியுள்ளது.
அந்தப் பகுதில் தொலைத்தொடர்புச் சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன என்று தெரியவருகின்றது. அரசாங்கத்துக்கு எதிரான பெரும் போராட்டங்கள் பற்றிய தகவல்களை மக்கள் அறிந்துவிடக்கூடாது என்ற நோக்கத்துக்காகவே அரசாங்கம் இணைய வசதிகளை முடக்கியுள்ளது என்று கூறப்படுகின்றது.
அதேவேளை, ஜனாதிபதி செயலகத்தின் நுழைவாயிலில், தொலைத்தொடர்பு வலையமைப்புக்களை முடக்கும் ஜாமர்கள் பொருத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது.
Discussion about this post