நாடாளுமன்றத்துக்கு அருகில் நேற்று பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டபோது, அந்தப் பகுதில் இலக்கத் தகடற்ற மோட்டார் சைக்கிள்களில் முகங்களை மறைத்தவாறு பயணித்த ஆயுததாரிகளுடன் பொலிஸார் முரண்பட்டுத் திருப்பி அனுப்பியுள்ளனர்.
நேற்று போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டிருந்தபோது அந்தப் பகுதியால் இலக்கத் தகடற்ற மோட்டார் சைக்கிள்களில் ஆயுதங்களுடன் முகங்களை மறைத்த குழுவொன்று வேகமாக அங்கும் இங்கும் பயணித்தது.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதற்கு எதிர்ப்புக் குரல் கொடுத்ததுடன், அந்த மோட்டார் சைக்கிள்களை மறிக்கவும் முயன்றனர்.
இந்தநிலையில், அந்தப் பகுதியில் பாதுகாப்புக் கடமையில் இருந்த பொலிஸார், அந்த மோட்டார சைக்கிள் அணியுடன் முரண்பாட்டில் ஈடுபட்டனர்.
அந்த மோட்டார் சைக்கிளிள் அணியில் பயணித்த மோட்டார் சைக்கிளை மறித்த பொலிஸார், மோட்டார் சைக்கிள் திறப்பைப் பறிமுதல் செய்ததுடன், வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அங்கிருந்து அவர்களைத் திருப்பி அனுப்பினர்.
அதேவேளை, மோட்டார் சைக்கிள் அணி இராணுவத்தைச் சேர்ந்தது என்றும், வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post